உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

#SriLanka #Gotabaya Rajapaksa #Investigation #Easter Sunday Attack #LANKA4 #Court
Riya
1 hour ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், குறித்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவே தற்போது அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேன்முறையீட்டு மனுவில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!