2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

#world_news #LANKA4 #Peace #Nobel #Prize
Riya
2 hours ago
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதியரசரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருமான நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நீதி மற்றும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துவதற்கும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய நவநீதம் பிள்ளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 

மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நீதி தொடர்பான அவரது நீண்டகாலப் பணிகள் இவ்விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், உலகளவில் எட்டு போர்களைத் தாம் முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!