கல்வி மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் – 5 ஆண்டுகளில் 96 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
#SriLanka
#PrimeMinister
#LANKA4
#education
#Harini Amarasooriya
#Cabinet
Riya
4 hours ago
கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முன்மொழிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், முதலாம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறைமையை மாற்றியமைத்தல் மற்றும் தேசிய கல்விச் சபையை நிறுவுதல் உள்ளிட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 96 பில்லியன் ரூபாயைச் செலவிடும் திட்டத்திற்கும் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.