“8 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும்!” – நோர்வே மீது ட்ரம்ப் விமர்சனம்!
#world_news
#Time
#LANKA4
#Nobel
#Prize
#Norway
#DonaldTrump
Riya
16 hours ago
தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் பல போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறிய ட்ரம்ப், ஒவ்வொரு போருக்கும் தலா ஒரு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தால், இதுவரை எட்டு முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் பலருக்கும் தெரியாத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அமெரிக்காவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இதற்காக நோர்வேயை மறக்க மாட்டோம் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.