ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கண்டியில் பிக்குகள் பாதயாத்திரை!
#SriLanka
#government
#today
#kandy
#Gnanasara Thero
#LANKA4
#release
Riya
1 hour ago
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து இன்று (10) கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரியும், அவரது காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை ஆரம்பமானது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவிப்பது அவரது தனிப்பட்ட விடயம் மட்டுமல்ல; முழு தேசத்திற்கும் பௌத்த சாசனத்திற்கும் உரிய விடயம் எனக் குறிப்பிட்ட அவர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனையின்றி ஆதரிப்பது அனைவரினதும் கடமை என வலியுறுத்தினார்.
கண்டியில் ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.