கடல் கொந்தளிப்பு தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுப்பு - கரையோர மக்களின் கவனத்திற்கு
#SriLanka
#weather
#Warning
#Sea
Thamilini
1 hour ago
மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையுள்ள கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.