ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடரும் மகா சஙகத்தினரின் பேரணி!
#SriLanka
#Gnanasara Thero
#Rally
Thamilini
1 hour ago
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாகவும், பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் மகா சங்கத்தினரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
"காவி உடைக்கு நீதி" மற்றும் "தேசிய உறுதிப்பாட்டுப் பூசை மற்றும் சுதந்திரப் பாதயாத்திரை" ஆகிய கருப்பொருள்களின் கீழ் நடைபெறும் இந்த பேரணி நேற்று கண்டியில் ஆரம்பமானது.
இப்பாதயாத்திரையின் முதல் நாள் பயணம் நேற்று மாலை கடுகன்னாவைப் பகுதியில் நிறைவடைந்தது.
பங்கேற்பாளர்கள் இன்று கடுகன்னாவிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடரவுள்ளனர்.