இன்றைய வானிலை - பிற்பகலுக்கு மேல் மழைக்கு வாய்ப்பு

#SriLanka #weather #Rain #Department of Meteorology
Thamilini
1 hour ago
இன்றைய வானிலை - பிற்பகலுக்கு மேல் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் 01.00 மணிக்குப் பிறகு  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!