களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - சிகிச்சைப் பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

#SriLanka #Crime #GunShoot #kalutara
Thamilini
2 hours ago
களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - சிகிச்சைப் பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

களுத்துறை, நகோடாவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்துள்ளார். 

 9ஆம் திகதி காலை சுமார் 07:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், உணவகத்தின் முன்பாக உரிமையாளரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். 

 இந்தத் தாக்குதலில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 படுகாயமடைந்த அவரது மனைவி, இன்று காலை (11) நகோடா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

 உயிரிழந்த பெண், தொடங்கொடவைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்தச் சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!