இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

#SriLanka #Pakistan #LANKA4 #T20 #Cricket #L4
Prasu
2 hours ago
இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, பாகிஸ்தான் மாறும் இலங்கை இடையேயான இரண்டாவது T20 ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில், மாஸ் சதாகட் 96 ஓட்டங்களும் பர்ஹான் 73 ஓட்டங்களும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில், சமிந்து 29 ஓட்டங்களும் தீக்ஷண 32 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்று இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!