நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்

#SriLanka #Complaint #children #Crime #LANKA4 #information #national
Abi
2 hours ago
நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் கணிசமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவு பணிப்பாளர் ஷானிகா மலல்கொட இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக, சிறுமிகள் மீதான துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் கணிசமான எண்ணிக்கையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஷானிகா மலல்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!