சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
#SriLanka
#Investigation
#Bribery Commission
Thamilini
1 hour ago
முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) இன்று வருகை தந்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.