அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை இரத்துச் செய்யக் கோரிய மனு டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணை!
#SriLanka
#Parliament
#LANKA4
#Court
#petition
#Archuna
Abi
2 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மனு இன்று ஆரம்பகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.