எரிபொருள் விநியோகம் தனியார் வசமாவதை தடுக்க திட்டம் - 75 எரிபொருள் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

#SriLanka #government #Fuel #AnuraKumaraDissanayake
Thamilini
1 hour ago
எரிபொருள் விநியோகம் தனியார் வசமாவதை தடுக்க திட்டம் - 75 எரிபொருள் நிலையங்களை அமைக்க அரசாங்கம்  தீர்மானம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு  2026-ல் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  தனியார் துறை எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, வரம்பற்ற இலாபங்களை ஈட்ட முயற்சிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதன்படி, தனியார் எரிபொருள் நிலையங்கள் மட்டுமே அமைந்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, புதிய நிலையங்கள் திறக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த காலாண்டில் ரூ. 28 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதுடன், அதனைத் தியாகம் செய்து மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கத் தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், தனியார் நிறுவனம் உரிய இலாபங்களைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!