ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானது - முன்னாள் தலைமை நீதிபதி விசனம்!

#SriLanka #CourtOrder #Prison #Gnanasara Thero #condemns
Thamilini
2 hours ago
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டவிரோதமானது - முன்னாள் தலைமை நீதிபதி விசனம்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையை விட அதிகம் என்று கூறி, முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா அத்தண்டனையின் சட்டப்பூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

'அனைத்து இலங்கை பௌத்த பேரவை'  கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட  அவர், "ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானது. இது ஒரு அசாதாரணமான சூழல்," என்று குறிப்பிட்டார்.

  நீதிமன்ற அவமதிப்பிற்கான தண்டனை என்பது 1,500 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது 18 மாதங்களுக்கு மிகாத சாதாரண சிறைத்தண்டனை மட்டுமே. அதாவது ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே," என்று அவர் விளக்கியுள்ளார். 

 "ஆனால், சட்டம் 18 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கும் நிலையில், பிரீதி பத்மன் சுரசேன ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளார். அந்தச் சட்ட ஏற்பாடு மேன்முறையீட்டு நீதிமன்ற அவமதிப்பிற்கு மட்டுமே பொருந்தும். மற்ற விவகாரங்கள் தொடர்பாக அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை," என்று சில்வா எடுத்துரைத்துள்ளார். 

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பையும் முன்னாள் தலைமை நீதிபதி நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!