கொக்கைன் போதைப்பொருளுடன் ஜமைக்கா நாட்டவர்கள் கைது

#SriLanka #Colombo #ARREST #drugs
Thamilini
2 hours ago
கொக்கைன் போதைப்பொருளுடன் ஜமைக்கா நாட்டவர்கள் கைது

கொக்கைன் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொண்ட சோதனையில் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சோதனையின்போது 1 கிலோகிராம் 49 கிராம் கொக்கைனைப் பறிமுதல் செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அந்த நால்வரையும் கைது செய்தனர். 

 கைது செய்யப்பட்ட ஆண்களின் வயது முறையே 23 மற்றும் 48 ஆகவும், பெண்களின் வயது 43 மற்றும் 52 ஆகவும் உள்ளதாகக் பொலிஸார்  தெரிவித்தனர். 

 இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!