நான்காவது நாளாக தொடரும் பிக்குகளின் நடைபயணம்!
#SriLanka
#Gnanasara Thero
#Monk
#Buddhist
Thamilini
1 day ago
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாகவும், பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் மகா சங்கத்தினரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரை, இன்று (13) தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகிலிருந்து கடந்த 10-ஆம் திகதி 'காவி உடைக்கான நீதி - தேசிய உறுதிமொழி மற்றும் சுதந்திரப் பேரணி' (Justice for the Robe – National Pledge Offering and Freedom March) தொடங்கியது.
இப்பேரணியானது வரகாபொல, நிட்டம்புவ மற்றும் கடவத்த ஆகிய நகரங்களின் ஊடாகச் சென்று, 15-ஆம் திகதி கொழும்பை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, இன்றைய பேரணி வரகாபொலவிலிருந்து தொடங்கி நிட்டம்புவவை நோக்கிச் செல்லவுள்ளது.