குரு பிரதீபா பிரபா விருது பெற்ற விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபருக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பாராட்டு!

#SriLanka #School #LANKA4 #education #Principal #Visit
Abi
1 hour ago
குரு பிரதீபா பிரபா விருது பெற்ற விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபருக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பாராட்டு!

இந்த ஆண்டுக்கான குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்றுக்கொண்ட, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் பி. ஜெயகாந்தை, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, சிறப்பான சேவைகளை வழங்கும் கல்வியாளர்களின் முயற்சிகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் குரு பிரதீபா பிரபா விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், விருதைப் பெற்றுக்கொண்ட அதிபர் பி. ஜெயகாந்துக்கு கல்விச் சமூகத்தினரும் பாடசாலைச் சமூகத்தினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!