தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று (13) ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இதனால் வரும் நாட்களில் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், இந்த வானிலை அமைப்பு தொடர்பாக வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் தகவல்களைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்குமாறும் அந்தத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றானது வடகிழக்கு திசையிலோ அல்லது மாறிவரும் திசைகளிலோ வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும்.
ஆகவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.