மன்னாரில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்!
#SriLanka
#Mannar
#Death
#Accident
#Bus
#LANKA4
#Injury
Abi
1 day ago
மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளமடுப் பகுதியில், மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.