நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நீதிமன்றத்தில் முன்னிலை!
#SriLanka
#Parliament
#Prison
#LANKA4
#Member
#Court
Abi
15 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான ஆறு நிலையான வைப்புக் கணக்குகளை முதிர்வுத் திகதிக்கு முன்னர் மீளப்பெற்று, அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.