தென் கொரிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து: 8 பேர் காயம் - சந்தேக நபர் கைது

#ARREST #Hospital #Attack #LANKA4 #SouthKorea #Knife #L4
Prasu
5 hours ago
தென் கொரிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து: 8 பேர் காயம் - சந்தேக நபர் கைது

தென் கொரியாவின் இன்ச்சியோன் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்; இவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் சூழல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தனது இரு கைகளிலும் கத்திகளைக் கட்டிக்கொண்டு வணிக வளாகத்தின் பல தளங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் செல்லும் வழியில் மக்களைத் தாக்கியதாகவும் பின்னர் அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் கண்காணிப்புக்கான மின்னணு வளையத்தை (electronic monitoring ankle bracelet) காலில் அணிந்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவர்; இவர்களில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அந்த அறிக்கைகள் தெரிவித்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!