கொழும்பில் மழைநீர் தேக்கத்தைத் தடுக்க இரு வார கால அவகாசம்! வடிகால் துப்புரவுப் பணிகளுக்கு உத்தரவு.
#SriLanka
#Colombo
#Meeting
#District
#LANKA4
#Commitee
#Week
Riya
1 hour ago
கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பைக் கருத்திற்கொண்டு, கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகளை உடனடியாகத் துப்புரவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாரஹேன்பிட்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மழைநீர் தடையின்றி வடிந்தோடுவதை உறுதிப்படுத்தும் வகையில், கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளைத் துப்புரவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
விசேட சூழ்நிலையாகக் கருதி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துப்புரவுப் பணிகளை நிறைவு செய்வதுடன், அவற்றைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.