2030ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்களாக உயர்த்த அரசாங்கம் திட்டம்!

#SriLanka #government #Digital #LANKA4 #economy #Commitee
Riya
1 hour ago
2030ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலர்களாக உயர்த்த அரசாங்கம் திட்டம்!

இலங்கையைப் புத்தாக்க உற்பத்திகளை உருவாக்கும் நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தவும், 200,000 பேரைக் கொண்ட டிஜிட்டல் தொழிற்படையை உருவாக்கவும் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

“டிஜிட்டல் யுகத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற 26ஆவது இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டின் (SLEIS 2026) இரண்டாம் நாள் நிகழ்வான ஒக்டோபர் 13ஆம் திகதி உரையாற்றும்போதே இந்த இலக்குகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டன.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்திகளை ஊக்குவிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!