ராஜபக்ஷக்கள் குடும்பத்தில் தொடரும் கைது நடவடிக்கை - பசிலுக்கு பிடியாணை!

#SriLanka #Basil Rajapaksa #CourtOrder #warrant
Thamilini
16 hours ago
ராஜபக்ஷக்கள் குடும்பத்தில் தொடரும் கைது நடவடிக்கை - பசிலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் (Interpol) ஊடாக 'சிவப்பு அறிவித்தலை' (Red Notice) பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபா நிதியானது, அப்பணியகத்தின் விளம்பர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

அதற்குப் பதிலாக, ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது 12,000 டீ-ஷர்ட்களை (T-shirts) வழங்குவதற்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!