அனோஜனின் மரண தண்டனை இரத்து - சவுதி உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

#SriLanka #SaudiArabia #HighCourt #SivarasaAnojan #DeathPenalty
Thamilini
4 hours ago
அனோஜனின் மரண தண்டனை இரத்து - சவுதி உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நேற்று (13) ரத்து செய்துள்ளதாக, இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் முகப்புத்தக்கத்தில் பதிவிட்ட அவர்,   இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். 

 மேலும், இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும்; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுக்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். 

 சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய இலங்கைத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்று, அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மாற்றுவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!