கைதடியில் மாற்றுத்திறனாளிகள் பாடசாலை விடுதியில் மாணவன் மீது தாக்குதல்
#SriLanka
#Jaffna
#Student
#Attack
#LANKA4
#disabilities
#L4
Prasu
2 hours ago
யாழ்ப்பாணம் - கைதடியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கி நின்று கல்வி கற்கும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் மீதே நேற்றையதினம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த சம்பவமானது சாவகச்சேரி பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்தவகையில் பொலிஸார் இது குறித்து கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.