நீர்கொழும்பில் ரயிலுடன் மோதுண்டு இத்தாலிய பிரஜை உயிரிழப்பு!
#SriLanka
#Colombo
#Accident
#Negombo
#Train
Thamilini
21 hours ago
நீர்கொழும்பில் உள்ள கட்டுவ (Kattuwa) ரயில் நிலையத்தில், ரயிலுடன் மோதுண்டு இத்தாலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலிய நாட்டவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த நபர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த வெளிநாட்டவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.