யாழில் 257 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு – அமைச்சர் சந்திரசேகர்

#SriLanka #Jaffna #District #Minister #Project #LANKA4 #Award #certificate
Riya
1 hour ago
யாழில் 257 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு – அமைச்சர் சந்திரசேகர்

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்த யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 257 பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கியதுடன், அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, சொந்த வீடுகளை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகப் பயனாளிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தமக்கு நம்பிக்கையளிப்பதாகவும் பயனாளிகள் குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!