தேர்தல் சட்ட மீளாய்வு: பொதுமக்களின் முன்மொழிவுகள் பாராளுமன்றக் குழுவிடம் கையளிப்பு.

#SriLanka #Election #Parliament #Meeting #Minister #LANKA4 #Public #Commitee
Riya
1 hour ago
தேர்தல் சட்ட மீளாய்வு: பொதுமக்களின் முன்மொழிவுகள் பாராளுமன்றக் குழுவிடம் கையளிப்பு.

தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்வது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, பாராளுமன்ற விசேட குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால், பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து, அவை தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுக் கூட்டத்தின்போதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட 31 முன்மொழிவுகள் உள்ளிட்ட விடயங்களை நிபுணர்கள் குழு ஆராய்ந்துள்ளது. 

அத்துடன், தேர்தல்கள் தொடர்பில் முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுக்களின் அறிக்கைகளும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளிடமிருந்தும் கருத்துகளும் முன்மொழிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அபயவரத்ன, பொதுமக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் தமது திருத்தங்களையும் புதிய முன்மொழிவுகளையும் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் பாராளுமன்ற விசேட குழு தீர்மானித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் கருத்துகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் விரும்பினால், தமது தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!