மனிதனை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்பு!
தொழில்நுட்பத்தை மனிதனை மையமாகக் கொண்ட தேசிய அபிவிருத்திச் சாதனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கணினிச் சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, கொழும்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற 44ஆவது தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி, சிறு வர்த்தகர்களுக்கான இலகுவான டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுயமாகப் பொதுச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தேசிய அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வினைத்திறன் மிக்க பொதுச் சேவைகளை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.