கிளிநொச்சியில் மைதான அபிவிருத்திக்கு ரூ.90 மில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

#SriLanka #School #Kilinochchi #government #LANKA4 #Fund #Devolopment #L4
Prasu
2 hours ago
கிளிநொச்சியில் மைதான அபிவிருத்திக்கு ரூ.90 மில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக மைதானங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக மொத்தம் ரூ.90,071,532.14 (சுமார் ரூ.90.07 மில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஏற்பாட்டில், குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான மைதான அபிவிருத்திப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள்:

  • மாசார் GTMS – ரூ.50 இலட்சம்
  • கிளிநொச்சி மத்திய கல்லூரி – ரூ.61.874 இலட்சம்
  • அக்கராயன் மகா வித்தியாலயம் – ரூ.50.857 இலட்சம்
  • கிளிநொச்சி இந்துக் கல்லூரி – ரூ.50.361 இலட்சம்
  • இளந்தாரகை விளையாட்டுக் கழகம் – நிரூ.50 இலட்சம்
  • வள்ளுவர் விளையாட்டுக் கழகம் – ரூ.50.473 இலட்சம்

இதேவேளை, ரூ.64.5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆனைவிழுந்தான் விளையாட்டுக் கழகத்தின் மைதான அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவித்தல் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு வாய்ப்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!