புதிய கல்விச் சீர்திருத்தங்கள்: தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு!
#SriLanka
#PrimeMinister
#LANKA4
#education
#national
#Harini Amarasooriya
Abi
3 hours ago
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில், ஒக்டோபர் 15ஆம் திகதி மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அனுநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரைச் சந்தித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட குறித்த பாடத்திட்டக் கட்டமைப்பு, இதன்போது தேரர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.