15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத் தடை? – புதிய வழிகாட்டல் கோவை அமைச்சரவைக்கு!
மனநலச் சேவைகளை அச்சமோ பாகுபாடோ இன்றி அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்குவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டினால் பிள்ளைகள் எதிர்கொள்ளும் இணையவழித் துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட புதிய வழிகாட்டல் கோவை, எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உலக மனநல தினத்தை முன்னிட்டு, “இலங்கையில் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகப் பயன்பாடு தடைசெய்யப்பட வேண்டும்” என்ற தலைப்பில் கண்டி தேசிய வைத்தியசாலையில் விவாதப் போட்டியொன்று நடத்தப்பட்டது.
குறித்த விவாதப் போட்டியின் இறுதி நிகழ்வு ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மனநலப் பாதுகாப்பு, பரிவு மற்றும் புரிந்துணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.