ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவாரா? – பிரதமர் அதிரடிப் பதில்!

#PrimeMinister #Gnanasara Thero #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Harini Amarasooriya
Abi
2 hours ago
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவாரா? – பிரதமர் அதிரடிப் பதில்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், உரிய நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த தீர்மானத்தை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர், நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாசாரம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை மதிப்பவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு உரிய தீர்மானத்தை எடுக்கும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்டியிலிருந்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், ஞானசார தேரர் சிறை உடைகளை அணிய வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணி, பின்னர் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாக மாறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!