இலங்கை – கியூபா உறவை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல்!

#SriLanka #Jaffna #LANKA4 #education #municipal council #Ambassador #Cuba #discussion
Abi
3 hours ago
இலங்கை – கியூபா உறவை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல்!

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் கல்வி, மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேராவுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கியூபாவின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும், 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!