ஜனாதிபதி செயலகம் முன் பொலிஸார் அதிரடி நடவடிக்கை – பிக்குகளின் போராட்டக் கூடாரங்கள் அகற்றம்!

#SriLanka #Police #Protest #LANKA4 #Buddhist
Abi
1 hour ago
ஜனாதிபதி செயலகம் முன் பொலிஸார் அதிரடி நடவடிக்கை – பிக்குகளின் போராட்டக் கூடாரங்கள் அகற்றம்!

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பௌத்த பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதற்காகப் பொலிஸ் பேருந்துகள் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், போராட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போராட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, காவி உடைகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!