லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு - 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இலங்கை வரும் கப்பல்!
#SriLanka
#Litro Gas
#Ship
Thamilini
17 hours ago
3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (18) நாட்டிற்கு வரவிருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, எரிவாயு இருப்பை இறக்கும் பணி உடனடியாகத் தொடங்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
இந்த எரிவாயு இருப்பைப் பெற்றவுடன், அடுத்த மூன்று நாட்களில் மேலும் 350,000 சிலின்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பராமரிக்கும் ஒரு நடவடிக்கையாக, இன்று (18) உட்பட கடந்த மூன்று நாட்களில் 350,000 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
எனவே, தேவையற்ற முறையில் எரிவாயு இருப்புகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களை லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் மேலும் கேட்டுக்கொள்கிறது.