பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம் - 1,200-க்கும் மேற்பட்டோர் கைது!

#SriLanka #ARREST #FRANCE #Protest #Violence
Thamilini
16 hours ago
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம் - 1,200-க்கும் மேற்பட்டோர் கைது!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

 550,000-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட வீதிகளில் இறங்கியுள்ளனர், மேலும் 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைநகர் பாரிஸில், நேற்று மாலை (17) முதல் கலவரத் தடுப்பு பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் நீர்த்தாரை பீரங்கிகளையும் பயன்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. 

தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன்   பல நகரங்களில் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்தக் கலவரத்தின் போது 150-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பிரதமர் செபாஸ்டியன் லெ கொர்னுவேல் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!