யாழில் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்!
#SriLanka
#Jaffna
#vehicle
#seize
Thamilini
17 hours ago
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஏழு வாகனங்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் நான்கு அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். அவற்றுக்கு எவ்விதப் பதிவு ஆவணங்களும் (பதிவுப் புத்தகங்கள்) இல்லை.
மீதமுள்ள மூன்று வாகனங்களில் ஒன்று மோசடியான பதிவு காரணமாகவும், மற்றைய இரண்டு வாகனங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டவை என்பதாலும் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.