பலாலி பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!
#SriLanka
#Protest
#people
#LANKA4
#release
Lakhi
13 hours ago
தங்களது பூர்வீக நிலங்களை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் மீண்டும் குடியேற வேண்டும் என வலியுறுத்தி பலாலி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மக்கள், தங்களது பூர்வீக நிலங்களில் மீண்டும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பல வாரங்களாகத் தொடரும் இப்போராட்டத்துக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.