ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்திற்கான சான்றிதழை வழங்கினார் சபாநாயகர் - சட்டமூலம் அமுலுக்கு வந்துள்ளது!

#SriLanka #Law #speaker #Anti-Corruption
Thamilini
2 hours ago
ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்திற்கான சான்றிதழை வழங்கினார் சபாநாயகர் - சட்டமூலம் அமுலுக்கு வந்துள்ளது!

அண்மையில் திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வழங்கியுள்ள நிலையில் குறித்த சட்டமூலம் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்த சட்டமூலம், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

 இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்திருத்தமானது   இலங்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கமைய, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமாக சட்டமாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!