ஞானசார தேரரின் விடுதலை - பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டம் 05ஆவது நாளை எட்டியது!

#SriLanka #Protest #Gnanasara Thero #Monk
Thamilini
3 hours ago
ஞானசார தேரரின் விடுதலை - பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டம் 05ஆவது நாளை எட்டியது!

வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகார மகா தேவி பூங்காவில்   பிக்குகளால் தொடங்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (20) ஐந்தாம் நாளாகத் தொடர்கிறது.

 16ஆம் திகதி பிற்பகலில் விகார மகா தேவி பூங்காவிற்கு வந்த பிக்குகள் இந்த சத்தியாகிரகத்தைத் தொடங்கினர். 

அன்று அவர்கள் தற்காலிக கூடாரம் ஒன்றை கட்டச்சென்ற போது பொலிஸாருடன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன்பு முகாமிட்டிருந்த பிக்குகள் குழு, பின்னர் புத்த சாசன அமைச்சகத்தின் முன்பு வந்து, அதன் செயலாளருடன் கலந்துரையாடியது. 

 பின்னர், அந்தக் கலந்துரையாடல் பலனளிக்கவில்லை என்றும், தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகார மகா தேவி பூங்காவிலேயே தங்கியிருப்போம் என்றும் பிக்குகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!