பிரான்ஸின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#FRANCE
#Protest
#Curfew
#Riots
Thamilini
2 hours ago
பிரான்ஸில் அதிகரித்து வரும் கலவரங்களை கட்டுப்படுத்த சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அவசர சீர்த்திருத்தங்களை கோரி சுமார் 800,000 மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளதுடன், கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கலவரங்களுக்குக் குற்றவாளிகளும் தீவிர இடதுசாரிகளுமே காரணம் என்று குற்றம் சாட்டிய லெகோர்னு, பாரிஸில் அவசரநிலையை அறிவிக்கும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.