'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் விசாரணை!
#SriLanka
#Parliament
#government
#petition
#HighCourt
Thamilini
2 weeks ago
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், இன்று (20) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து இதுவரை மொத்தம் 22 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, நீதிபதிகள் அச்சலா வெங்காப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.