நீதியரசர் பதவிக்கான வெற்றிடம் குறித்து விவாதம் நடத்த தேவையில்லை - சபாநாயகர் அறிவிப்பு!

#SriLanka #Parliament #speaker #Judge #Debate
Thamilini
2 weeks ago
நீதியரசர் பதவிக்கான வெற்றிடம் குறித்து விவாதம் நடத்த தேவையில்லை - சபாநாயகர் அறிவிப்பு!

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர் பதவிக்கான வெற்றிடம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20)  நடைபெற்ற அமர்வின்போது சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர் பதவியில் நிலவும் வெற்றிடம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியின் 21 உறுப்பினர்கள் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 83 (1)பிரிவின் பிரகாரம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பாராளுமன்ற நிலையியல் கட்டளை 83 (1) பிரிவானது ஜனாதிபதி,பதில் ஜனாதிபதி,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,நீதிபதிகளின் தனிப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக கருதப்படும். ஆகவே உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடம் என்பது தனிப்பட்ட விடயமாக கருத முடியாது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!