அநுரவின் ஆட்சிக்கு எதிராக சூனியம் வைக்கும் தேரர்கள்!

#SriLanka #Monk #AnuraKumaraDissanayake #Buddhist
Thamilini
20 hours ago
அநுரவின் ஆட்சிக்கு எதிராக சூனியம் வைக்கும் தேரர்கள்!

தற்போதைய ஆட்சியை மூன்று மாதங்களுக்கு பலவீனப்படுத்துமாறு வலியுறுத்தி தேரர்கள் நேற்றைய தினம் சூனியம் வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை விளித்து, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சியைப் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி பூஜை வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 மேலும், இலங்கையில் புத்த சாசனம் நிலைத்திருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறும் தேவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் வகையில் இந்த பூஜைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!