மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் – புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வலியுறுத்தல்
#SriLanka
#PrimeMinister
#Development
#LANKA4
#students
#education
#Harini Amarasooriya
Abi
19 hours ago
திறமைகள் மட்டுமன்றி, உடல் மற்றும் உள ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலத் தலைமுறை மாணவர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
இதற்கமைய, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், விளையாட்டை மேலதிக நடவடிக்கையாகக் கருதாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் அத்தியாவசிய அங்கமாகக் கருதுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 20ஆம் திகதி தியகமவில் நடைபெற்ற 40ஆவது அகில இலங்கைப் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.