பிரான்சில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய தடை
#Student
#FRANCE
#Protest
#LANKA4
#Banned
#firecracker
#L4
Prasu
15 hours ago
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலவரங்களைத் தொடர்ந்து, பெட்ரோல் அல்லது எரிவாயு நிரப்பப்பட்ட கலன்கள் மற்றும் போத்தல்களைக் கொண்டு செல்வதற்கும் பட்டாசுகளை வைத்திருப்பதற்கும் தற்காலிகத் தடை விதித்து பாரிஸ் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தத் தடைகள் பாரிஸ் பெருநகரப் பகுதி முழுவதற்கும் அவை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய போராட்டங்களைக் கருத்திற்கொண்டு, பாரியளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மேலும், உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள ஒரு தொகுதி தூரத்திற்குள் தலைக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.