பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி கொட்டாஞ்சேனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்!

#SriLanka #Health #Women #LANKA4 #cancer #Camp #Awareness
Abi
13 hours ago
பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி கொட்டாஞ்சேனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்!

சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பெண்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமும் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் நடைபெறவுள்ளன.

இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் கண்டறியப்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 15 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்படுவதாகவும், தினமும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பெண்கள் இந்நோய்களால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் சிகிச்சையின் வெற்றிவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கமைய, குறித்த முகாமில் மருத்துவர்களால் மார்பகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பாப் ஸ்மியர் பரிசோதனைகளும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவின் வழிகாட்டுதலிலும், மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையிலும், ‘She Leads’ மகளிர் அமைப்பும் கொட்டாஞ்சேனை கிழக்கு ‘பிரஜாசக்தி’ அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

கொழும்பு மாநகர முதல்வர் வைரே கெல்லி பால்தசார் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

பெண்களிடையே புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆரம்பகட்ட நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!